

மா. பவளச்செல்வன்
குளுவாங், செப் 14-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக மைபிபிபி கட்சி தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர்.
இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலின்போது தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சைட் ஹூசேன் சைட் அப்துல்லாவை ஆதரித்து மைபிபிபி கட்சியினர் களம் இளங்கியது குறிப்பிடத்தக்கது.
மைபிபிபி கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட ஜொகூர் மாநில மைபிபிபி கட்சியினர் இன்று கலந்து கொண்டனர்.
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று மைபிபிபி கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

