

மா. பவளச்செல்வன்
குளுவாங் செப் 14-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சைட் ஹூசேன் சைட் அப்துல்லாவின் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவோம் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசு சார்பில் இங்கு தேசிய முன்னணி போட்டியிடுகிறது.
மகோத்தா சட்டமன்ற தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்ற கடுமையாக உழைப்போம் என்று அவர் சொன்னார்.
இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தேசிய முன்னணிக்கு ஆதரவாக டாக்டர் சத்யா பிரகாஷ் தலைமையில் உலு சிலாங்கூர் கெஅடிலான் பொறுப்பாளர்கள் களம் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

