மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார மையத்தை அமைத்தது கெஅடிலான் கட்சி!

மா. பவளச்செல்வன்

குளுவாங் செப் 14-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி வெற்றிக்கு ஆதரவாக கெஅடிலான் கட்சி தேர்தல் பிரச்சார மையத்தை அமைந்துள்ளது.

இந்த தேர்தல் நடவடிக்கை மையத்தை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தொடக்கி வைத்தார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், கெஆடிலான் மகளிர் அணி உதவித் தலைவர் சங்கீதா ஜெயக்குமார் உட்பட ஜொகூர் மாநில கெஅடிலான் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றிக்கு கெஅடிலான் கட்சி கடுமையாக பாடுபடுவோம் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தெரிவித்தார்.

டாக்டர் சத்யா பிரகாஷ் தலைமையில் உலு சிலாங்கூர் மாநில கெஅடிலான் பொறுப்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தொகுதி துணை தலைவர் சைபுடின் ஷாபியும் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles