

மா. பவளச்செல்வன்
ஷா ஆலம் செப் 15-
மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்படும்
மஇகாவின் 3 கோபுரம் கொண்ட கட்டத்தின் மாதிரி வடிமைப்பை தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று திறந்து வைத்தார்!
ம இகா தலைமையகத்தின் அருகில் இந்த மூன்று கோபுரங்கள் அடங்கிய கட்டடம் கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று
மஇகாவின் 3 கோபுரங்கள் கொண்ட புதிய கட்டடத்தின் மாதிரி வடிப்பை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி உற்சாகத்துடன் திறந்து வைத்தார்.
மஇகாவின் 78ஆவது தேசிய பொதுப் பேரவை ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.
பேரவை நடக்கும் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மஇகாவின் புதிய கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பை அவர் திறந்த வைத்தார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் உட்பட மஇகா மற்றும் தேசிய முன்னணியின் முக்கியத் தலைவர்கள் அப்போது உடன் இருந்தனர்.

