


ஈப்போ செப் 19-
பேரா மாநிலத்தில் போலீஸ் துறையில் சேவைய்யாற்றி பணி ஓய்வு பெற்ற 107 பேருக்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி மாட் அரிஸ் கௌரவித்து சேவைக்கான நற்சான்றிதழை எடுத்து வழங்கினார்.
பேரா மாநில அரசாங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சான்றிதழ் பெற்றவர்களின் பல உயர் நிலை அதிகாரிகளும் அடங்குவர் .
இந்த நிகழ்வில் பேசிய டத்தோ அஜிசி , பணி ஓய்வு பெறுகிறோம் என்ற கவலையில் சிலர் முழ்கியுள்ளனர்.
அதை நினைத்து வாடுவதை விட்டு அடுத்த உடல் ஆரோக்கத்தற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது நல்ல சிந்தனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள சிறு சிறு தொழில்களில் ஈடுபட வாய்ப்புகளை தேடவேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
.
நானும் இந்த ஆண்டுடன் பணி ஓய்வு பெற உள்ளேன் உங்களுடைய மன நிலையில் தான் உள்ளேன் என்றார்.
ஆகவே வாழ்க்கையில் சாகும் வரை சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதால் மன தையரித்துடன் வாழ்வதற்குறிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கோப்ரல் பி. விஜயன், சார்ஜன் வி. ரத்னா, கோப்ரல் ஆர். ஸ்ரீ தரன் , சார்ஜன் மேஜர் வி. செல்வதுரை , இன்ஸ்பெக்டர் தி. மனோன்மணி , ஆர் . சந்திரகாந்தன் ஆகியோரும் நற்சான்றிதழை பெற்றவர்களில் அடங்குவர்.

