குளோபல் இக்வான் நிறுவன உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது!

கோலாலம்பூர், 19 – குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் (ஜி.ஐ.எஸ்.பி.) நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை தாய்லாந்து – புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில் நேற்று மாலை 6.00 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.

அந்த நிறுவனத்தின் சின்னம் கொண்ட மோட்டார் ஹோம் எனப்படும் தங்கும் வசதி கொண்ட இரண்டு ஆடம்பர வாகனங்களையுமா கைப்பற்றினர்.

அந்த இரண்டு வாகனங்களும் X31337 மற்றும் X37313 என்ற பதிவு எண்களைக் கொண்டிருந்தாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

வடக்கு மண்டல எல்லை உளவு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பயனாக இந்த கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles