பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்; ஒப்புக்கொண்டது இஸ்ரேல்! தொடர்ந்து அதிகரிக்கும் பதட்டம்….

ஜெருசலேம்: செப் 19-
பேஜர், வாக்கி டாக்கி மூலம் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் மூண்டால் உலக நாடுகளில் மத்தியில் பதட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நேற்று பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் மர்மமான முறையில் வெடித்துச் சிதறின.

இதற்கு, அவற்றில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் காரணம் என்றும், இஸ்ரேல் உளவுப்படை 5 மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டுகளை அவற்றில் வைத்து விட்டது என்பதும் தெரிய வந்துள்ளது..

இந்த தாக்குதலில், இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் போரின் புதிய கட்டத்துக்கு வந்து இருக்கிறோம்’ என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் கால்லன்ட் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே பேர் உச்சக் கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles