வேலை வழங்குவதாக மோசடி செய்த கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு!

தைப்பிங், செப் 20-
வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி செய்ததாக கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

அதில் இங் காய் யீ (22) என்ற கர்ப்பிணிப் பெண்ணும் மேலும் மூன்று பெண்கள் மற்றும் ஏழு ஆண்களும் குற்றச்சாட்டை மறுத்தனர்.

லியோங் யிங் ஜி (21), லீ காங் பா (22); வோங் லி ஜியா (23) லாம் யோங் ஜுன் (24), யோங் லாங் (24), லேயு யீ யிங் (24), தோ கை ஷீன் (24), இங் சீ காங் (25), சுவா செர் செங் (25) மற்றும் 26 வயதான யோவ் லி கீ ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 அன்று மதியம் 1.30 மணியளவில் லாரூட், மாத்தாங் மற்றும் சிலாமா மாவட்டங்களில் உள்ள தாமான் டேசா தெக்கா செந்தோசாவில் ஒன்றாக சேர்ந்து இச்செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 511வது பிரிவு சேர்த்து வாசிக்கப்பட்டது.

மேலும், தண்டனைச் சட்டத்தின் 120பி (2) பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால். அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles