
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் இன்று 584 மாணவர்களுக்கு 35 லட்சம் வெள்ளி கல்வி நிதியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
584 இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதிக்கான காசோலையை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று நேரடியாக வழங்கினார்.
பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று கணபதி ராவ் பெருமையுடன் தெரிவித்தார்.


