
நேற்றிரவு அம்பாங்கில் நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பானின் மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார்.
கடல் அலையென திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும் உற்சாகத்தில் திளைத்தார்.
அம்பாங் மற்றும் கோம்பாங் நாடாளுமன்ற தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் கைப்பற்றி சாதனைப் படைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


