
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்த மகா துரோகியான அஸ்மின் அலியை கோம்பாங்கில் இருந்து தூக்கி எறியுங்கள் என்று கோம்பாங் வாக்காளர்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோம்பாங்கில் போட்டியிடும் அஸ்மின் அலி மற்றும் அம்பாங்கில் போட்டியிடும் ஸூரைடா கமாரூடின் ஆகியோர் கெஅடிலான் கட்சிக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் துரோகம் இழைத்தார்கள்.
கோம்பாங்கில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அம்பாங்கில் போட்டியிடும் புவான் ரோட்ஸியா ஆகியோரை அமோக வெற்றி பெற செய்யும் படி நேற்று நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.


