புதுடில்லி : செப் 24-
6 தமிழ் படங்கள் உள்பட 28 படங்களை இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான 97ஆவது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அளித்த பேட்டியில், “2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் செல்கிறது.
மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா படங்களை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12 இந்தி திரைப்படங்கள், 4 மலையாள திரைப்படங்கள், 3 மராத்தி, 6 தெலுங்கு படங்கள் அனுப்பப்பட உள்ளன.
ஒரியா மொழி படம் ஒன்றையும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.