
ஜொகூர் பாரு: செப் 25
அம்னோ இளைஞரணி தலைவர் டத்தோ அக்மால் சலே- செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக அது மக்கோத்தா இடைத்தேர்தலில் சீன வாக்காளர்களைப் பெருவாரியாக பாதிக்காது என்று ஜொகூர் மாநில DAP கட்சியின் உதவி தலைவர் தியோ நீ சிங் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த இரு தலைவர்கள் இவ்வாறு அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கொண்டு வருவதை சீன வாக்காளர்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்.
அவர்கள் மக்கோத்தா இடைத்தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் நிலையை மட்டுமே மதிப்பீடு செயவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அம்னோ தலைவர் ஒருவரின் கூற்று காரணமாக சில சீன சமூகத்தினர் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது
இருந்தும் ஜொகூர் மாநிலத்தை முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்ல அனைத்து தலைவர்களும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
பெர்னாமா

