

ம இகா கோட்டை என்று வர்ணிக்கப்படும் தாப்பா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிகளில் யார் வெற்றி பெறுவர் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ எம் சரவணன் இம்முறை தொகுதியை தற்காத்து கொள்ளவதில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமியிடம் மிகக் கடுமையான போட்டியை எதிர் நோக்கி இருக்கிறார்.
அதேபோல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்து பக்கத்தான் ஹரப்பான் சார்பில் எஸ் கேசவன் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கேசவன் மீண்டும் வெற்றி பெறும் வகையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட்டில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று வருகிறது.
தாப்பா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வாகை சூட போவது யார் என்பது நாளை தெரிந்து விடும்

