
நாளை நடைபெறும் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் குறைந்தது 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று இறுதி கட்ட கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் முதல் இன்று இறுதிகட்ட பிரச்சாரம் வரை நாடு முழுவதும் பக்கத்தான் ஹரப்பானின் சிவப்பு அலை வீசுகிறது.
பக்கத்தான் ஹரப்பா யின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஹெலிகாப்டரில் பறந்து நாடு தழுவிய அளவில் செய்த சூறாவளி பிரச்சார கூட்டங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது.
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் எல்லா தகுதிகளும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டிருப்பதால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மலேசியர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

