மாணவர்கள் கல்வியை கைவிடும் பிரச்சனையைக் களைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை – பிரதமர் வேண்டுகோள்

பத்தாங் காலி, செப். 28 – நாட்டில் மாணவர்கள்
கல்வியைப் பாதியில்
கைவிடும் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கம் எடுத்து வரும்
நடவடிக்கைகள் சாதமான பலனைத் தருவதை உறுதி செய்வதற்கு
அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமது பிள்ளைகள் கல்வியைப் பாதியில் கைவிடுவதை அப்படியே விட்டு
விட முடியாது எனக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
அவர்களின் திறனை மேம்ம்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு முழு
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

கல்வியில் அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பையும் வசதிகளையும் நாம்
தர வேண்டும்.

கல்வியைக் கைவிடுவது ஒரு புதிய பிரச்சினை இல்லை.
ஆயினும், கோவிட்-19 போன்ற சிக்கல்களை எதிர்நோக்கியச் சூழலில் இந்த
பிரச்சனை சிக்கலானதாகவும் சவால்மிக்கதாகவும் ஆகிவிட்டது என்று
அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles