திடீர் வெள்ளத்தைத் தடுக்க கோத்தா கெமுனிங் தொகுதியில் கால்வாய்கள் சீரமைப்பு- மாண்புமிகு பிரகாஷ் தகவல்

ஷா ஆலம், செப். 28 – வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் தடுக்க கோத்தா கெமுனிங் தொகுதி நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு நல்கி வருகிறது.

வரும் நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றக் கட்டத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக உரிமையாளர் இல்லாத கால்வாய்கள் உட்பட அனைத்து வடிகால் களையும் பராமரிப்பது தாங்கள் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கூறினார்.

கோத்தா கெமுனிங் தொகுதி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் வடிகால் பராமரிப்பும் ஒன்றாகும்.

ஏனெனில் எங்களிடம் உரிமை கோரப்படாத சுமார் ஒரு கிலோமீட்டர் வடிகால்கள் உள்ளன. அவற்றை எங்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிலாங்கூர் முழுவதும் உரிமை கோரப்படாத வடிகால் பிரச்சினையைத் தீர்க்க 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

எனவே, மேற்கூறிய மூன்று துறைகளுடன் இணைந்து அதனை நாங்கள் அதை நிவர்த்தி செய்யத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles