பொழுது போக்கு மையத்தில் குடிநுழைவுத்துறை சோதனை- 164 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

கோலாலம்பூர், செப். 28- ஜாலான் லோக் யூவில் உள்ள பொழுதுபோக்கு
மையம் ஒன்றின் மீது நேற்றிரவு அதிரடிச் சோதனை நடத்திய
குடிநுழைவுத்துறை அதிகாரிகள் 164 சட்டவிரோதக் குடியேறிகளைக்
கைது செய்தனர்.

பேரங்காடி ஒன்றில் அமைந்துள்ள அந்த பொழுது போக்கு மையம்
வெ.1,000 முதல் வெ.100,000 வெள்ளி வரையிலான கட்டணத்தில் அந்நிய
உபசரணை தொடர்பு அதிகாரிகள் (ஜி.ஆர்.ஒ.) சேவையை வழங்கி
வந்ததாகக் கூறப்படுகிறது.

அமலாக்கக் குழுவினர் அந்த பொழுதுபோக்கு மையத்தில் நுழைந்த போது
அவர்களிடமிருந்து தப்ப முயன்ற சில பெண்கள் கீழே விழுந்து
காயங்களுக்குள்ளாயினர்.

அந்த மையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையின் போது
சில ஜி.ஆர்.ஓ.க்கள் கழிப்பறை மற்றும் ஸ்டோர் அறைகளில் பதுங்கிக்
கொண்டனர்.

நேற்றிரவு 11.45 மணி தொடங்கி விடிற்காலை 1.30 மணி வரை நீடித்த
இந்த சோதனை நடவடிக்கையில் 21 முதல் 60 வயது வரையிலான 164
பேர் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை
இயக்குநர் வான் முகமது சவுபி வான் யூசுப் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles