மைக்கி தலைவர் பதவிக்கான தேர்தலில்நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் வெற்றி!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் செப் 28-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு 139 வாக்குகள் கிடைத்தன.

இவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ சண்முகத்திற்கு 88 வாக்குகள் கிடைத்தன.

துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ டாக்டர் குமாரராஜா 109 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மலாக்கா டதீதோ இராஜசேகரனுக்கு 79 வாக்குகள், ஷாம் சுந்தருக்கு 38 வாக்குகள் கிடைத்தன.

மூன்று உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 4 பேர் போட்டியிட்டனர்.

இதில் டத்தோ டல்ஜிட் சிங் 176 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.

ராமாநாயுடு 176 வாக்குகள் மற்றும் பேராசிரியர் ராஜா 159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

நடப்பு உதவித் தலைவர் நெகிரி செம்பிலானை சேர்ந்த திருநாவுக்கரசு 131 வாக்குகள் பெற்று அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டார்.

செயலாளர் பதவிக்கு தட்சணாமூர்த்தி 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தேவன் 101 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

துணை செயலாளர் பதவிக்கு ஞானசம்பந்தன் 116 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நஜிமி 110 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

பொருளாளர் பதவிக்கு சுஜேன் 138 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட சிவகுமார் 88 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles