
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 28-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு 139 வாக்குகள் கிடைத்தன.
இவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ சண்முகத்திற்கு 88 வாக்குகள் கிடைத்தன.
துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ டாக்டர் குமாரராஜா 109 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட மலாக்கா டதீதோ இராஜசேகரனுக்கு 79 வாக்குகள், ஷாம் சுந்தருக்கு 38 வாக்குகள் கிடைத்தன.
மூன்று உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 4 பேர் போட்டியிட்டனர்.
இதில் டத்தோ டல்ஜிட் சிங் 176 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி …
Ok..
Ok
ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்திற்கு பருவ நிலை மாற்றமும் காரணம்- அமைச்சர் கூறுகிறார்
புத்ராஜெயா, செப். 29- நாட்டில் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்திற்கான காரணங்களில் ஒன்றாக பருவநிலை மாற்றமும் விளங்குவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
சீதோஷணநிலை மாற்றம் ஏற்படும் போது கொசுக்களின் பெருக்கம் தீவிரமடைவதாக அவர் சொன்னார்.
மணல் பொறிப் பகுதி போன்ற கட்டமைப்பு அம்சங்களும் இதற்கு காரணமாக விளங்குகின்றன. மணல் பொறிப் பகுதிகள் ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களாக உள்ளதை நான் கவனித்துள்ளேன்.
சுகாதார நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத வளாகங்களின் கூரைப் பகுதிகளும் லார்வாக்கள் வளரும் இடங்களாக திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இங்கு நடைபெற்ற ஒரு மணி நேர மலேசிய துப்புரவு இயக்கத்தின் கீழ் ஏடிஸ் கொசுக்களுக்கு எதிரான மெகா கோத்தோங் ரோயோங் 2.0 திட்ட…
மாகோத்தா சட்டமன்ற தொகுதியை பாக்காத்தான் பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றியது!
குளுவாங், செப். 29-
ஜோகூர் மாநில சட்டமன்ற தொகுதியான மாகோத்தாவுக்கு நடைபெற்ற தேர்தலில் பாக்காத்தான் பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளரான சைட் ஹூசேன் சைட் அப்துல்லா 27,995 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முகமது ஹைசான் ஜாபருக்கு 7,347 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. 339 ஓட்டுகள் செல்லாதவை,
பாரிசான் நேஷனல் வேட்பாளர் 20,648 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரேல் தாக்குதல்- தென் லெபனான் இரண்டாவது காஸா ஆகலாம்- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!
லண்டன், செப். 29-
இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ் புல்லாவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக தென் லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் லெபனானும் மற்றொரு காஸாவாக மாறிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டு மோதலின் போர்க்களமாக அது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையின் 79 ஆவது அமர்வில் ஆற்றிய உரையில் போரெல் கூறினார்.
லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஈரானிய மோதலை சுட்டிக்காட்டிய போரெல், பரந்த பிராந்தியப் போராட்டத்தில் நாடு போர்க்களமாக மாறி வருவதாகவும் இதனால் லெபனான் சமூகம் மோதலில் சிக…
2027 ஆம் ஆண்டிற்குள் 60,000 இடமான் வீடுகளை நிர்மாணிக்க சிலாங்கூர் இலக்கு!
சைபர் ஜெயா, செப். 29- வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் ரூமா இடமான் முன்னெடுப்பின் கீழ் 60,000 கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த முன்னெடுப்பின் கீழ் வீடுகளை நிர்மாணிக்கும் பணி சீராக நடைபெற்று வரும் வேளையில் 40,000 வீடுகள் தற்போது தொடர்புடைய தரப்பினரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
ரூமா இடமான் முன்னெடுப்பின் கீழ் ஒப்புதல், திட்டமிடல் அனுமதி மற்றும் செயல்முறை, கட்டிட அனுமதிக்காக ஏறக்குறைய 40,000 வீடுகள் காத்திருக்கிறது.
நேற்று இங்கு ரூமா இடமான், புத்ரா இடமான் மற்றும் சௌஜானா இடமான் ஆகிய வீடமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் கினி
தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் இலவச பற்றுச் சீட்டுகள் விநியோகம்!
ஷா ஆலம், செப். 29- தீபாவளியை பண்டிகையைக் கொண்டாடுவதில்
வசதி குறைந்தவரகள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையை குறைக்கும்
நோக்கில் மாநில அரசு தகுதி உள்ள குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி
மதிப்பிலான இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கி
வருகிறது.
அந்த வகையில் பத்து தீகா தொகுதியும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த
பற்றுச் சீட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி விநியோகித்து
வருகிறது.
இந்த விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி
வரை திறந்திருக்கும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல்
அல் ரஷிட் கூறினார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ்.
மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு
பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று
அவர் சொன்னார்.
சிலாங்கூர் கினி
பிரிமியர் லீக் கிண்ண போட்டியில் அர்செனல், லிவர்பூல் கலக்கல் வெற்றி!

