பிரிமியர் லீக் கிண்ண போட்டியில் அர்செனல், லிவர்பூல் கலக்கல் வெற்றி!

லண்டன்: செப் 29-

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல், லிவர்பூல் கிளப்புகள் வெற்றி பெற்றன.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடியது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் 4-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கேப்ரியல் மார்டேல், லியான்ரோ துரோசார்ட், காய் ஹாவர்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வூல்ஸ் கிளப்பை வீழ்த்தியது.

மென்செஸ்டர் சிட்டி 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியுடன் சமநிலை கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles