
நாட்டின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி 1,000 துளசி செடிகள் நடும் விழா இனிதே நடைபெற்றது.
ரிஞ்சிங் தோட்ட அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் செந்தூல் வாலிபர் சங்கமும் கோ. சா. தமிழ் எழுச்சி மன்றம் ஆதரவோடும் செமினி, (செம்மை)
சமுதாயச் சிந்தனை மன்றம் ஏற்பாட்டில் 1,000 துளசி செடிகள் நடும் விழா சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நமது முன்னோர்கள் இயற்கை நேசித்து அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பண்பாட்டு கூற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர் என்றும் இயற்கை நேசிப்பது நமது பண்பாடாகும் என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயல் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன் தமது சிறப்புரையில் பெருமிதம் கொண்டார்.
இயற்கையை நேசிப்போம் செடிகள் வளர்ப்போம் என்கின்ற நோக்கத்துடன்
செமினி, (செம்மை)
சமுதாயச் சிந்தனை மன்றத்தின் மாபெரும் திட்டமானது
மிகவும் வரவேற்கத்தக்கதும் இளையோர் மத்தியில் பசுமையை காப்போம் என்கின்ற மாண்புகள் உன்னதமானது என அவர் கூறினார்.
இம் மாபெரும் துளசி நடும் விழா சிறப்பு நிகழ்ச்சியுடன் பாரம்பரிய நிகழ்ச்சிகள், மாணவச் செல்வங்களை ஈர்க்கும் வகையிலும் வண்ணம் தீட்டும் போட்டிகள் தேசியத் தினத்தை நினைவுக் கூறும் கவிதைப் பாடும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செமினி, (செம்மை) சமுதாயச் சிந்தனை மன்றத்தின் தலைவரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான சுமா. செல்வராஜ் கூறினார்.
இவ்வட்டார பொது மக்களையேடைய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளும் மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசியத் தினத்தை நினைவுக் கூறும் கவிதைப் பாடும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் செடிகளை வளர்ப்போம் இயற்கை நேசிப்போம் என்ற கருப்பொருளுடன் இவ் வட்டாரத்தின் நான்கு ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளின் மாணவச் செல்வங்களும், வட்டாரப் பொதுமக்கள், பொது இயக்கங்களின்
பொறுப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இலவச நிகழ்ச்சியில் சுகாதார மருத்துவ பரிசோதனைகள் போன்ற பல்வேறுபட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு உட்பட மோர் மற்றும் சென்டோல் இலவசமாக வழங்கப்பட்டது.

இப்பயன்மிக்க நிகழ்ச்சிக்கு டத்தோ சுரஷ் ராஜா முருகையா, செந்தூல் வாலிபர் சங்கத்தின் தலைவர் தேவராஜ்,
சுந்தர் ந. ஆ. செங்கூட்டுவன்,
கோ.சா தமிழ் எழுச்சி மன்றத்தின்
தேசியத் தலைவர் மணித்திலகம் ஜெயபாலன், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சமூக நல ஆர்வலர்கள், ரிஞ்சிங் ஆலயப் பொறுப்பாளர்கள், ரிஞ்சிங் காற்பந்து குழுவினர், செம்மையின் செயலவை உறுப்பினர்கள், ஆலய இளைஞர்கள், மகளிர்கள், பல்வேறுபட்ட சமூக நல இயக்கங்களின் பொறுப்பாளர்கள், உட்பட நாட்டின் முன்னணி கலைஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு பேராதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் (செம்மை) தலைவர் சுமா. செல்வராஜ், செயலாளர் ச. குணசேகரன், பொருளாளர் சு. மகேந்திரன் உட்பட சக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

