சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி3 மாடிகளுடன் 30 லட்சம் வெள்ளியில் கட்டப்படவுள்ளது! டத்தோ சகாதேவன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்,
மா பவளச்செல்வன்

ரவாங் செப் 30-
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி மிக விரைவில் மூன்று மாடிகளுடன் மிகவும் கம்பீரமாக கட்டப்படவுள்ளது.

இதற்காக தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் தெரிவித்தார்.

தற்போது அமைந்துள்ள பழைய கட்டடத்திற்கு பதிலாக மூன்று மாடிகளுடன் புதிய பள்ளி கட்டடம் கட்டப்படும்.

பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்திற்கு சொந்தமான தோட்டங்களில் சுங்கை சோ தோட்டமும் ஒன்றாகும்.

அந்த வகையில் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டடம் எழுப்ப 30 லட்சம் வெள்ளியை தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் ஒதுக்கி உள்ளது என்று அவர் சொன்னார்.

ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி இன்று பணிவிடை பெற்றார்.

பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது டத்தோ சகாதேவன் இந்த இனிப்பான செய்தியை ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles