ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி லிங்கப்பன் பணி ஓய்வு பெற்றார்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங் செப் 30-
ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி லிங்கப்பன் 40 ஆண்டுகால ஆசிரியர் பணிக்கு பின்னர் இன்று ஓய்வு பெற்றார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தியை உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், பள்ளி வாரியத் தலைவர் நடேசன்,
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் குமரேசன், மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ் எஸ். பாண்டியன், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, முருகன், ராஜேஸ்ராவ், உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் கலைவாணன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

40 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணை உள்ளம் கொண்ட தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி வளர்சிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதை மறுக்க முடியாது என்று டத்தோ சகாதேவன் தமது உரையில் குறிப்பிட்டார்.

புத்தாக்க போட்டிகளில் சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி பல வெற்றிகளை பெறுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார் என்று பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் சூட்டினர்.

பணி ஓய்வு பெற்ற ஜெயந்திக்கு பதிலாக சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக திருமதி சாந்தி பொறுப்பேற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles