
பத்துகாஜா, அக் 8- சமயமும் மதமும் அதுசார்ந்த மக்கள் மட்டுமின்றி பல்வேறு நம்பிக்கையையும் சமய சிந்தனையையும் கொண்டவர்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் விதைக்கும் அடித்தளமாக திகழ்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் கூறினார்.
அதேவேளையில், அனைத்து மதத்தினர் மத்தியிலும் அன்பையும் நற்குணத்தையும் வாழ்வியல் நெறியையும் விதைப்பதில் சமய சிந்தனை பெரும் பங்காற்றுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பெம்பான் அல்-எசான் மசூதிக்கு மரியாதை நிமித்தமாகவும் அவர்களின் தேவைகள் குறித்தும் கண்டறிய் சென்றிருந்த போது அவருக்கு அதன் நிர்வாகத்தினர் வழங்கிய் வரவேற்ப்பில் நெகிழ்ந்ததாக கூறிய பின்னர் சிவகுமார் மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்..
அவரது இந்த வருகையின் போது மசூதியின் நிர்வாகத்தினரோடு பொது மக்களும் அன்பாகவும் மரியாதையுடனும் தன்னை வரவேற்றதோடு அவர்களின் அணுகுமுறையும் நட்பு பாராட்டும் விதமும் தன்னை வெகுவாக வியக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது சம்மதப்பட்ட மசூதியின் வரலாறு குறித்து பேசியதோடு அதன் வளர்ச்சி, மேம்பாட்டுடன் அதன் செயல் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக கூறினார்.
தனது இந்த திடீர் வருகை அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் அவர்களின் முந்தைய கோரிக்கைகளை நிறைவு செய்தமைக்காக நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் நன்றியினை பதிவு செய்தார் என்றும் நினைவுக்கூர்ந்தார். மேலும், மசூதியை சுற்றிலும் வேலி அமைக்க அவர்கள் வைத்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், இச்சந்திப்பின் போது மசூதிக்கு இரண்டு ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியை வாங்குவதற்காக வெ.5000 மானியமாய் வழங்கியதில் தாம் பெரிதும் மகிழ்வதாகவும் பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் மக்களுடன் அணுக்கமான உறவிலும் அவர்களின் கோரிக்கை, தேவைகளை நன்முறையில் கையாளவும் சம்மதப்பட்ட மசூதியும் அதன் நிர்வாகத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் உட்பட சட்டமன்றம், சமூகத்தலைவர்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்லதொரு தொடர்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
இறுதியாய்,மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதே எங்களின் கடமை என்றும் அத்தகைய பொறுப்பும் எங்களதே என்றும் கூறிய அவர் சமய அமைப்புகளும், சமூக இயக்கங்களும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலமாக இருக்கவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.