
கோலாலம்பூர், அக். 9- ஆர்.எச்.பி. லெக்காஸ் ஹைவே ரைட் 2024 சைக்கிள் பந்தயத்திற்கு வழி விடும் வகையில் காஜாங்-சிரம்பான் (லெக்காஸ்) நெடுஞ்சாலை வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்.
இந்த சைக்கிளோட்ட நிகழ்வு சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு தொடங்கும் என்று
காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
சிரம்பான் செல்லும் லெக்காஸ் நெடுஞ்சாலையின் இரண்டாவது கிலோமீட்டர் பகுதி, பண்டார் டெக்னாலஜியை நோக்கிய லெக்காஸ் நெடுஞ்சாலை மற்றும் லெக்காஸ் நெடுஞ்சாலையின் செமினி நுழைவாயில் ஆகியவையே மூடப்படவிருக்கும் சாலைகளாகும் என அவர் தெரிவித்தார்.
பெர்னாமா

