காதலிக்க நேரமில்லை இசை விழா நாளை மகிழ்ச்சியில் ரசிகர்களை கலக்க வருகிறது!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 11-
இறவா வரம் பெற்ற பழைய பாடல்களை மலேசியர்களுக்கு வழங்கும் வகையில் நட்சத்திர இன்னிசை விழா நாளை மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

நாட்டில் புகழ்பெற்ற
ஜெனிரா கிரியேடிவ் நிறுவனத்தைச் சேர்ந்த காயத்ரி தண்டபாணி கூறுகையில் மூன்று மணி நேரம் இந்த காதலிக்க நேரமில்லை இசை நிகழ்ச்சி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்றார்.

ஜெனிரா கிரேட்டிவ் நிறுவனமும் இவேன்சர் சொலுசன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை படைக்கிறது.

முழுக்க முழுக்க 60, 70ஆம் ஆண்டுகளில் வெளிவந்த புகழ் பெற்ற பாடல்களை கொண்டு இக்கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாளை அக்டோபர் 12ஆம் தேதி இரவு 7 மணிக்கு கேஎல்சிசி பிளேனரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேர் இந்நிகழ்ச்சியை நேரடியாக காணவுள்ளனர்.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பாடகியான கல்பனா ராகவேந்தர் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் சத்திய பிரகாஷ், மாளவிகா, சைட் சுபாஹான், முத்து சிற்பி, ஶ்ரீதர் சேனா, அனு ஆனந்த் ஆகியோர் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர்.

குறிப்பாக விஜய் டீவி புகழ் மணி அன்ட் பேன்ட் இசைக் குழுவினர் நேரடி இசையை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி மூத்தவர்களை தவிர்த்து இளைஞர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்று காயத்ரி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles