
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 13-
கடந்த 2 வருடங்களாக ஓஷி ரியூ கராத்தே சங்கம், தேசிய கராத்தே சாம்பியன்சிப் போட்டியை சிறப்பான முறையில் நடத்தி வருவதாக அதன் ஏற்பாட்டாளர் சுகுமாறன் தெரிவித்தார்.
அக்டோபர் 12ஆம் தேதி முதல் 13ஆம் திகதி வரையில் இரண்டு நாட்களுக்கு இந்த கராத்தே போட்டி தலைநகர் செத்திய வங்சா
ஸ்ரீ இஸ்கந்தார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டும் சுமார் 650 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் கராத்தே விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் செயல்பட்டு வரும் கராத்தே கிளப்புகளை பிரதிநிதித்து கராத்தே மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
5 வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓஷி ரியூ கராத்தே சங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்பொழுது சிலாங்கூர் மாநிலத்தில் இதன் நான்கு கிளைகளும் மற்றும் தலைநகரில் மூன்று கிளைகளும் செயல்பட்டு வருகிறது.
சுமார் 300 மாணவர்கள் சங்கத்தின் கீழ் பயிற்ச்சி பெற்று வருவதாக அதன் தலைவர் அமரேசன் தெரிவித்தார்.
இதற்கிடையே அமைச்சர் நிக் நஸ்மி இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவதன் மாணவர்கள் மத்தியில் விளையாட்டு துறை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க கூடும்.
அதே சமயம் இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.