
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் அக் 15-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 74 982 பேர் பதிந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து லட்சம் இலக்கை எட்டும் இந்த திட்டம் நிறைவேறும் தருணத்தில் இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று தெரிவித்தார்.
சொக்சோ நிறுவனத்தின் கீழ்
உதவித் தேவைப்படுபவர்களை நேரடியாக கண்டு சொக்சோ உதவுகிறது என்றும் அவர் சொன்னார்.
உதவி தேவைப்படும் பெர்கேசோ சந்தாதாரர்களை நேரடியாக சென்று அவர்களுக்கான உதவிகளை பெர்கேசோ அதிகாரிகள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இன்று செந்தூலிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் சொக்சோவின் சேவைகளை பாராட்டி பேசினார்.
சொக்சோ சந்தாதரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை. வசதி குறைந்தவர்களும் வேலை இடத்தில் விபத்துக்குள்ளானவர்களும் உதவிக்கு காத்திருக்கும்போதும் நாம் அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி உதவிகள் அவர்களை முறையாக சென்றடைகிறாதா என்பதையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் உதவி பணத்தை மோசடி செய்வது மோசமான குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும் தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சொன்னார்.
மேலும் தீபகற்ப மலேசியாவில் உள்ள பெர்கேசோ சந்தாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் சபாவிலுள்ளவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சின் திட்டம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் ஸ்டீவன் சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.

