இந்திய சமுதாயத்திற்காக4 மேம்பாட்டுத் திட்டங்களை அரசுஸஅமல்படுத்தி உள்ளது! டத்தோஸ்ரீ ரமணன் கூறுகிறார்

மா.பவளச்செல்வன்

சுங்கைபூலோ: அக் 16-
இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் அரசாங்கம் உணவுக் கூடைகள் மட்டும் வழங்கவில்லை.

மாறாக
நான்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் அமல்படுத்தி உள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்காக உணவுக் கூடைகள் வழங்கப்படுகிறது.

இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் அரசாங்கம் உணவுக் கூடையை மட்டுமே வழங்குகிறது என்று
கேலியா பேசுவார்கள்.

கேலியாக பேசுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

காரணம் கடந்த 8 மாதங்களில் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக 4 திட்டங்களை அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி , அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி மில்லியன், பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி, ஐ-பேப் மூலம் 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று அவர் சொன்னார்.

இத் திட்டங்களும் அனைத்தும் இந்திய சமுதாயத்திற்கு பெரும் பயனாக உள்ளது.

ஆகையால் இந்த உணவுக் கூடைகள் குறித்து கேலி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் சாடினார்.

நேற்று சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் 500 பேருக்கு உணவு கூடைகளை வழங்கும் விழாவுக்கு தலைமை ஏற்றபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles