
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலையில் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அமானா கட்சி தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ சலாவூடின் ஆயோப் தெரிவித்தார்.
இன்று காலையில் அரசர்கள் மன்ற கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மாலையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

