

நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்று இஸ்தானா நெகாரா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா தலைமையில் நடைபெற்ற
மலாய் ஆட்சியாளர்கள் மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இஸ்தானா நெகாரா வெளியிடுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலையில் 5.00 மணிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் பதவியேற்று கொள்கிறார்.

