
மின்சார சைக்கிளுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மினசார சைக்கிளைச் செலுத்திய 85 வயது முதியவர் ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து ஜாலான் பஹாவ்-கெமாயான் சாலையில் நிகழ்ந்தது.
பஹாவ்விலிருந்து லாடாங் கடேஸ் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி செலுத்திய கார் திடீரென்று மின்சார சைக்கிளுடன் மோதியது
சம்பந்தப்பட்ட மின்சார சைக்கிள் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு இடம் மாறும் போது காருடன் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. பலத்த காயங்களுக்கு இலக்கான பாதிக்கப்பட்ட ஆடவர் பலியானார்.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1) யின் கீழ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் ஹூ சாங் ஹூக் கூறினார்.

