2025 பட்ஜெட் மூலமாக மித்ராவை சரியான தடத்தில் கொண்டு வர வேண்டும்: முன்னாள் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ கருத்து 

பெட்டாலிங் ஜெயா: 

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்தி மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவான மித்ராவை சரியான தடத்தில் கொண்டு வர வேண்டும் என்று மூன்று முறை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சார்லஸ் சந்தியாகோ கூறினார் 

மலேசிய இந்தியர்கள், குறிப்பாக பி40 தரப்பினரின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் மக்களுக்கும் உதவுவதற்காக மித்ரா அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது 

ஆனால், தற்போது மித்ரா அதன் இலக்கில் இருந்து விலகி சமுகநல இலாகாவாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக மித்ரா முழுவதுமாக ஒரு மறுசீரமைப்பு கட்டமைப்பை முன்னெடுக்க வேண்டும். 

வெளிப்படை தன்மையான நிர்வாகத்தால் சமூகத்தில் இருக்கும் தலைசிறந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புடன் மித்ராவை வழிநடத்த வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். 

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் மித்ரா கவனம் செலுத்த வேண்டும். ஆக, தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 பட்ஜெட்டில் இந்திய மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்ட அறிவிப்புகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles