
வாஷிங்டன் அக் 18-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்” என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் நேற்று கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் ஒருவர் எனத் தெரியவந்தது.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காசாவில் நடந்த தாக்குதலில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.
படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த மூளையான சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாகவும்,
இது இஸ்ரேல் ராணுவத்தின் முக்கியமான சாதனை என்றும் காட்ஸ் தெரிவித்தார்.
டி.என்.ஏ ஆய்வுகளின் படி, இறந்தது சின்வார் என உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்

