
கோலாலம்பூர்: அக் 19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 13 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கியுள்ளார் என்பது தவறான கருத்து என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த பட்ஜெட் ஒரு மகத்தான பட்ஜெட்டாகும்.
நாட்டின் பொருளாதார மேம்பாடு, மக்களின் வளர்ச்சி, சமூக நலன் உட்பட அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு பிரதமர் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 13 கோடி வெள்ளியை பிரதமர் ஒதுக்கியுள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கு 13 கோடி வெள்ளி மட்டும்தானா என ஒரு சிலர் நினைக்கலாம். இதுவொரு தவறான புரிதல் ஆகும்.
காரணம் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்திய சமுதாயத்திற்கும் பயனளிக்கும் என்று அவர் சொன்னார்.
உதாரணத்திற்கு பள்ளிகளுக்கு என மொத்தமாக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளார்.
இது தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பயனளிக்கும்.
கல்வித் துறைக்கு தான் மிகப் பெரிய நிதியை ஒதுக்கியுள்ளார். இது அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
ஆகவே ஒதுக்கப்பட்ட நிதியின் வாயிலாக எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை தான் இந்திய சமுதாயம் சிந்திக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.


If, as per Dato Ramanan’s statement, other part of financial reservations willalso help the Indian community, why then MITRA embarking on helping Indian students as it should be the MOE?