பங்சாரில் தீபாவளி குதூகலம்மக்களோடு மக்களாக தகவல் அமைச்சர் பாமி பட்சில்

கோலாலம்பூர் அக் 21-
தகவல் தொடர்பு துறை அமைச்சரும் பந்தாய் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாஃமி பாட்சில் ஏற்பாட்டில் பங்சார் IWK Eco park வளாகத்தில் பொதுமக்களுடனான தீபாவளி ஒன்றுகூடல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த பாஃமி பாட்சிலுக்கு தமிழர்தம் பாரம்பரிய முறையில் மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்களுடன் இன்முகத்துடன் கைகுலுக்கி அமைச்சர் பாமி பட்சில் மகிழ்ந்தார்.

ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ். பக்தவச்சலம் தமது உரையில் தொகுதி மக்களுக்கு அமைச்சர் பாமி பட்சில் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles