85 வயது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார் மூத்த அரசியல்வாதி டாக்டர் பி.எஸ். பிள்ளை!

கோலாலம்பூர் அக் 20-
நாடறிந்த மூத்த அரசியல்வாதி மற்றும் கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி. எஸ். பிள்ளை அண்மையில் தமது 85 ஆவது வயது பிறந்த நாளை மிகவும் விமர்சையாக கொண்டாட்டிய மகிழ்ந்தார்.

மலேசிய தமிழ் கலைஞர் இயக்கத்தின் தலைவர் கே.பழனிசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கலந்து சிறப்பித்தார்.

கூட்டரசு பிரதேச ம இகா முன்னாள் துணை தலைவராக இருந்து இந்திய சமுதாயத்திற்கு சிறந்த முறையில் டாக்டர் பி.எஸ். பிள்ளை சேவையற்றினார் என்று டத்தோஸ்ரீ சரவணன் தமது உரையில் குறிப்பிட்டார்.

பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த டாக்டர் பி.எஸ். பிள்ளைக்கு டத்தோஸ்ரீ சரவணன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மகிழ்ந்தார்.

இந்த விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமருக்கும் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles