ரவாங் கவுன்சிலர் எலிஸ் சூ65 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி Jom Shopping பற்று சீட்டு – முறுக்கு பலகாரங்களை வழங்கினார்

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், அக் 20-
ரவாங் வட்டார கவுன்சிலர் எலிஸ் சூ இன்று zon 15 பகுதியில் உள்ள 65 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி பற்று சீட்டு மற்றும் முறுக்கு பலகாரங்களை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அவர் தனது பகுதியில் உள்ள இந்தியர்களுக்கு தன்னலம் கருதாமல் உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இவ்வாண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அவர் இன்று 65 இந்திய குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளி மதிப்புள்ள பற்று சீட்டு மற்றும் 60 வெள்ளி மதிப்புள்ள முறுக்கு பலகாரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் கலந்து கொண்டார்.

மக்களளை தேடிச் சென்று சேவையாற்றும் தலைவர்கள் தான் தேவை என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உணர்த்துவார்.

அதற்கு ஏற்ப கவுன்சிலர் எலிஸ் சூ சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று சுவா வெய்க் கியாட் பாராட்டினார்.

அன்பளிப்புகள் பெற்று கொண்ட மக்கள் கவுன்சிலர் எலிஸ் சூவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles