

கோலாலம்பூர் அக் 20-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அவர்களின் சார்பில் 200 உணவுக் கூடைகள் கிடைக்கப் பெற்றது.
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதியினர் இந்த 200 உணவு கூடைகளை வசதி குறைந்த மக்களுக்கு கொடுத்து உதவினர்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ அஸ்மானின் அதிகாரி ஜோர்தன் வேலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
டத்தோஸ்ரீ இரமணனின் மூத்த செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் சிறப்பு வருகை தந்து வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளை எடுத்து வழங்கினார்.
200 உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்த துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனுக்கு ஜோர்தன் வேலா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

