



பட்டர்வொர்த், அக் 20-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பினாங்கு ஜாலான் ஸ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த 45 மாணவர்களை பேராங்காடிக்கு அழைத்துச் சென்று புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டது.
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
முன்னாள் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் மற்றும் பத்து இமான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
புத்தாடைகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

