
கோலாலம்பூர் அக் 20-
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் அரசு எப்போதும் உணர்திறன் மற்றும் உறுதிபூண்டுள்ளது என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். இரமணன் கூறினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மக்களவையில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் மூலம் இந்த அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது.
இதில் RM421 பில்லியன் பட்ஜெட் என்பதோடு இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவுத் திட்டமாகும்.
“இது மக்களின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கும், அதற்கான அர்பணிப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது”.
மடாணி அரசாங்கம் அனைத்து இனங்களின் வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது மற்றும் உறுதிபூண்டுள்ளது..
“மலேசியர்களின், குறிப்பாக பி40 குழுவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பல முன்முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பதை 2025 பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது” என்று அவர் சொன்னார்.


இன்று நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான மந்திரி. மக்கள் மனம் கொண்ட மந்திரி. இந்தியர்கள் துயரம் கண்டு அவர்களுக்கு எப்படி உதவிகள் செய்ய வேண்டும் என தூர நோக்கம் கொண்ட மாமனிதர்.. இன்று இந்தியர்கள் நலன் கருதி பல இந்திய நெழிந்த கோப்பராசிகளை ஒன்று திரட்டி மகா சாதனை செய்தவர். அத்தோடு வந்து இருந்த எல்லா இந்திய கூட்டுறவுகளுக்கும் கிரண்ட் மூலமாக தலா முப்பது ஆயிரம் ரிங்கிட் மலேசியா.. கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.. இது கிடைத்தால் முடங்கி கிடக்கும் இந்திய கூட்டுறவு சங்கங்கள் புத்துணர்ச்சி பெற்று மீண்டு வரும் என நினைக்கிறேன்.. டத்தோ ஶ்ரீ மூலமாக கிடைத்தால் சிறப்பாக இருக்கும். அதுவும் இப்போது அவர் வகிக்கும் பதவியில் இருக்கும் பொழுது. காரணம் அடுத்த அமைச்சரவை மாற்றம் கண்டு டத்தோ ஶ்ரீ க்கு மூழு அமைச்சர் பதவி கிடைத்து வெறோரு அமைச்சுக்கு மாற்றம் கண்டால் வரும் புதிய கோப்பராசி அமைச்சர் இம்மாதிரி இருப்பார்களா என்பது சந்தேகமே.. ஆகவே நாம் இந்தியர்கள் காற்று உள்ள பொழுதே டத்தோ ஶ்ரீ மூலமாக தூற்றி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்..