பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 200 பந்துகள் அன்பளிப்பு!

பட்டர்வொர்த் அக் 20-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக 200 பந்துகள் நேற்று வழங்கப்பட்டது.

பினாங்கு பாகான் பெலாசா தங்கும் விடுதியில் நேற்று இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

70,000 வெள்ளி செலவில் ஷேக்கினா பிஆர் நிறுவனம் மற்றும் பினாங்கு கால்பந்து சங்கத்தின் நிதி உதவியின் பேரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து வளர்ச்சி திட்டத்திற்கு இந்த பந்துகள் வழங்கப்படவிருப்பதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவரும்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரான செனட்டர்,டாக்டர் ஆர்.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து பயிற்ச்சிக்கா வழங்கப்பட்டுள்ள பந்துகள் மாணவர்களின் கால்பந்து பயிற்சிக்கு உறு துணையாக அமையும் என்று செனட்டர் ஆர்.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என்.ராயார் அவர்களின் தலைமையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கல்வி,பொருளாதாரம் சமூக உதவிகளை வழங்கி வருவதாக த செனட்டர் ஆர.லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

உயர் கல்வி பயில வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பரிசீலனை செய்ய தயாராக உள்ளது என்றார்.

சிறப்புப் பிரமுகராக கலந்துகொண்ட மலேசியக் கால்பந்து சங்கத்தின் தலைமை செயல் முறை அதிகாரி கிறிஸ்டோபர் ராஜ் தமதுரையில் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கால்பந்து துறை வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் பொருட்டு கால்பந்து பந்துகளை வழங்க முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

இதன் மூலமாக இந்நாட்டில் கால்பந்து துறையில் சிறந்த இந்தியக் கால்பந்து விளையாட்டு வீர்ர்ரகளை உருவாகப் பெரிதும் துணையாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் உட்பட பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles