
ஸ்கூடாய், ஜூலை 3-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன் மிகச் சிறந்த வேட்பாளராக வலம் வருகிறார்.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் தியோ நி சிக் மூலம் உருவாக்கப்பட்ட இளம் தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஜனநாயக செயல் கட்சி எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
குறிப்பாக
மாண்புமிகு தியோ நி சிங் தலைமையிலான ஜொகூர் ஜசெக மகளிர் பிரிவின் HERLEAD – பெண்கள் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.
இளம் வயதிலிருந்தே தனது தலைவர்களை உருவாக்கி, வழிநடத்தும் கட்சி அது என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கார்த்தியாயினி ஜெயபாலன் கூறுகிறார்.
தேர்தல் காலங்களில் பெண்களை வெறும் கண்டுதைப்புக்கான வேட்பாளர்களாக ஜசெக ஒருபோதும் கருதியதில்லை.
அதற்கு பதிலாக, மக்களுக்கு திறம்பட சேவை செய்யக்கூடிய தலைவிகளை அடையாளம் கண்டு, அவர்களை வளர்த்தெடுத்து, தலைமைத்துவத்திற்குத் தயார்படுத்துவதில் கட்சி நீண்டகாலமாக நேரம், முயற்சி, வளங்களை முதலீடு செய்து வருகிறது.
அத்தகைய உறுதியான அர்ப்பணிப்பில் உருவான ஒருவராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்கிறார் கார்த்தியாயினி.
ஸ்கூடாய் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பக்கத்தான் ஹராப்பான் இவரை வேட்பாளராக தேர்வு செய்தது சிறந்த முடிவாகும்.
இந்த தேர்தலில் பல இந்திய பெண்கள் போட்டியிட்டாலும் அவர்களில் மிகவும் பிரபலமான வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் விளங்குவது மிகவும் பாராட்டுக்குரியது.

