
ஷா ஆலம், அக். 20-
தீபாவளிப்
பண்டிகையை முன்னிட்டு பத்து தீகா
தொகுதியிலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு ஷோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளை வழங்கும் நிகழ்வு நேற்று செக்சன் 32, கெமுனிங்
உத்தாமா ஜெயண்ட் பேரங்காடியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட்
ஹருண் அமினுர் ரஷிட் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு இலவச பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்தி
ஜெயண்ட் பேராங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப்
பொருள்களை வாங்கிக் கொண்டனர்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதிக்கு தலா 200
வெள்ளி மதிப்புள்ள 400 தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்
வழங்கப்பட்டதாக டோனியல் அல் ரஷிட் கூறினார்
இத்தொகுதியில் 13,000 பதிவு பெற்ற இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் சுமார் 600 பேர் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம்
செய்திருந்தனர்.
400 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கும்
அதேவேளையில் எஞ்சிய 200 பேருக்கு தொகுதி சேவை மையம்
வசமிருக்கும் உணவுக் கூடைகளை பகிர்ந்தளிக்கவிருக்கிறோம். க்ஷ
இதுதவிர,
எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் வழங்கிய 100
உணவுக் கூடைகளும் இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும்
என்றார் அவர்.

