
உலக அரங்கில் போற்றப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்பார் என்று இஸ்தானா நெகாரா அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நாட்டில் பங்குச்சந்தைகள் கிடு கிடுவென உயர்ந்தன.
கெந்திங், ஸ்போர்ட்ஸ் டோட்டோ, மெக்னம், கார்ஸ்பெர்க் உட்பட பல நிறுவனங்களின் பங்குகள் பல மடங்கு அதிகரித்தது.
கடந்த 15 மாதங்களுக்கு பின்னர் நாட்டின் பங்குகள் உயர்வு கண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வெளிநாட்டு முதலிட்டாளர்களும் மலேசியாவில் அதிக அளவில் முதலீடு செய்வார்கள் என்ற நம்பிக்கை இப்போது பிறந்துள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்ராஹிம் பெயரை கேட்டாலே உலகம் எல்லாம் அவரை தலை வணங்குகிறது.

