
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள மக்கள் நாயகன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லாட்சியை வழங்குவார் என்று லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தம்பதியர் மாலை அணிவித்து பாராட்டினார்.
உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருந்த தருணத்தில் மலேசியா திருநாட்டின் 10 ஆவது பிரதமராக நீங்கள் பதவி ஏற்று சாதனை படைத்து இருக்கிறீர்கள்.
நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த நல்லாட்சியை நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை பெரிதும் இருப்பதாக டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தெரிவித்தார்.

