
கோலாலம்பூர், அக். 25-
தலைநகரில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பது அதிகாரிகளின் முதன்மை பணி இலக்காக விளங்கும் என்று
பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலேஹா
முஸ்தாபா கூறினார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற ஆசியான் உச்சநிலை
மாநாட்டின் போது அந்த அமைப்பின் தலைவர் பதவியை
லாவோசிடமிருந்து மலேசியா ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வெள்ளத்
தடுப்பு விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியுள்ளதாக
அவர் சொன்னார்.
நாட்டின் பிரதான நுழைவாயிலாகவும் தலைநகருக்குரிய அந்தஸ்தோடு
பிராந்திய பொருளாதார மையமாகவும் கோலாலம்பூர் விளங்குவதை
தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெர்னாமா