மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி மானியம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 26-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் தலைமையில் இன்று மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வுக்கு சங்கத்தின் சார்பில் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் ஆலோசகர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

பின்னர் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு தமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு தமது அமைச்சின் சார்பில் 20,000 வெள்ளியை வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் ஆகியோரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles