சிலாங்கூரைச் சேர்ந்த 18,116 தொழில் முனைவோருக்கு வெ.110 கோடி கடனுதவி! டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர், அக். 28-
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் போட்டித் தன்மையை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சிலாங்கூரைச் சேர்ந்த 18,116 தொழில்முனைவோருக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக 110 கோடி வெள்ளி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சஹாபாட் அமானா இக்தியார் வாயிலாக 14,406 பேருக்கு 12.64 கோடி வெள்ளியும் தெக்குன் நேஷனல் திட்டத்தின் மூலம் 3,324 தொழில்முனைவோருக்கு 7.31 கோடி வெள்ளியும் பேங்க் ராக்யாட் மூலம் 208 பேருக்கு 25 கோடியே 39 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.

இது தவிர, எஸ்.எம்.இ. பேங்க் ராக்யாட் வாயிலாக 152 தொழில் முனைவோருக்கு
64.57 கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

பெர்னாஸ் பிரன்சாய்ஸ் தனியுரிமை நிதித் திட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களுக்கு 58 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles